264. தேவாதி தேவன் தனக்குச்

மங்களம்

பல்லவி

தேவாதி தேவன் தனக்குச்
சீர்த்தி[1] மேவு மங்களம்

அனுபல்லவி

ஜீவாதிபதி நித்யனுக்குத்
திவ்ய லோக ரட்சகனுக்குத் - தேவாதி

சரணங்கள்

1. ஞானவேத நாயகனுக்கு,
நரரை மீட்ட மகிபனுக்குத், - தேவாதி

2. பக்தர் மறவா பாதகனுக்குப்
பரம கருணா நீதனுக்குத், - தேவாதி

3. ஜெக சரணிய நாதனுக்குச்
சீஷர் புகழும் போதகனுக்குத், - தேவாதி


ராகம்: சௌராஷ்டிரம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்:  ல்.ஈ. ஸ்தேவான்


[1] கீர்த்தி