265. தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை

ஜீவாமிர்தம் தருவீரே

பல்லவி

தேவாதி தேவே, நீரே-சேவிக்கில் உமை,
ஜீவார்தம் தரு வீரே

அனுபல்லவி

ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
பாவாலும் எவர்முனும் ஓவா[1] தறிக்கைசெய்து - தேவாதி

சரணங்கள்

1. நன்றே, அருள் என்றே கொலைக்குச் சென்றாய்;-மரித்
தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்;
நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி,
நேசா, விஸ்வேசா, இராசா, சருவ ஜீவ - தேவாதி

2. பொல்லா உலகம் அல்லோ? இதனில் செல்லா,-துணை
நல்லாயனே, என்பேன்; வல்லாய்,
சல்லாப[2] நூலில் அதி உல்லாச மேவி நிதம்
தாயா,[3] மாதூயா, நன்னேயா, சுரர்கள் பதி - தேவாதி

3. பண்டே[4] மறைகை கொண்டே, இதயந் தொண்டே-புரிந்
தண்டே[5] வரும் உதவி உண்டே;
விண்டே[6] குறைகளும் தண்டை சுகிர்தமாகும்;
வேதா, என் தாதா,[7] அதீதா, மகத்வமான - தேவாதி


ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்:  ஆ. அல்வின்

[1] ஓயாது
[2] சரசம்
[3] தாய் போன்றவனே
[4] முற்காலம்
[5] அருகில்
[6] பிரிந்து
[7] உபகாரா