383. விலைமதியா ரத்தத்தாலே

மீட்கப்பட்டீரே

பல்லவி

விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே.

சரணங்கள்

1. உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன்-வலத்
திருவிலாவில் வடியும். - விலை

2. நீருமக் குரிமை
சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடைமை,-நீவிர்
சிந்திப்பது கடமை. - விலை

3. ஆகங்கள்[1] அவர்க்கு
ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ
மோகஇச்சைக ளணுகாதிருத்தல்
முக்கியமென்றறியீர். - விலை

4. ஆவியுந் தேவன்
அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ
தேவதுதிக ளதிலே-எழச்
செய்வீர் தினமு மிகவே. -விலை

5. மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ
பிளமுறு கேடறிவு-அதைப்
பின் தொடர்வது இழிவு. - விலை


ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்:  வே. மாசிலாமணி

[1] சரீரங்கள்