231. தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈது

பல்லவி

தருணம் ஈதுன் காட்சி சால[1]
அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே.

சரணங்கள்

1. கருணை ஆசன ப்ரதாப
சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! - தருணம்

2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்
பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! - தருணம்

3. உன்னதத்திருந் தென்னை ஆளும்
ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா![2] - தருணம்

4. அரிய வல்வினை தீப்பதற்குற
வான தட்சகா,[3]-ஓர்-அனாதி ரட்சகா! - தருணம்

5. அலகைநரகை அகற்றி, முழுதும்
அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! - தருணம்

6. தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,
தேவ பாலனே,-இம்-மானுவேலனே. - தருணம்


ராகம்: மணிரங்கு
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்


[1] மிக்க
[2] கடவுளே
[3] படைப்பாளி