பாதம் வந்தனமே
பல்லவி
பாதம் வந்தனமே! - வரப்பிர
சாதம் எந்தனமே.
சரணங்கள்
1. ஆதரவொடு வேதமே விடுத்
தாளும் அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப்
பதனே, சுசிகர - பாதம்
2. பேசுதற்கரிதான துத்திய
பெருமைக் கோமானே,[1] மெய்ச் சீமானே, அருள்
கோனே, சுசிகர - பாதம்
3. ஞானமாய் நரர்க் கான ஜீவனை
நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர - பாதம்
4. தீவினை தொலைத் தாவியே மிகுத்
தேவும் இங்கிதமே,[2] என் ரஞ்சிதமே, நீ
சந்ததமே! சுசிகர. - பாதம்
5. தாசரை விசுவாசமாய்க் கையில்
தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா[3] சுசிகர - பாதம்
ராகம்: யமுனாகல்யாணி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: ஆ. அல்வின்
[1] அரசனே
[2] பிரியமே
[3] வீரனே