304. பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே

பரனே பரப்பொருளே

கண்ணிகள்

1. பரனே, பரப்பொருளே-நித்ய-பாக்கியனே சத்ய வாக்கியனே,
நரரான பாவிகட்காய்-இந்த-நானிலத்தில் வந்த வானவனே!

2. காவில் அதம் ஏவை-தேவ-கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற-பொல்லா-வெஞ்சினக் கூரியின் வஞ்சமற‌

3. வேறோர் மலர்க்காவில்-சென்று-வேதனைப் போற்றி, மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம்-உந்தன்-ஆத்துமத்தில் வரலானதுவோ?

4. ஈராறு சீடர்களில்-பண இச்சை-மிகுந்த ஒரு சீடன்,
பேர் யூதாஸ்காரி யோத்தாம்,-அவன்-பேசினதின்படி காசு பெற்று.

5. ஓன்னாரின் கும்புகளை-அழைத்-தோடிவந்தே, உம்மை நாடி வந்தே,
கன்னத்தில் முத்தமிட்டே,-உம்மைக்-காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ?

6. காட்டிக் கொடுத்திடவும்,-அந்த-காதகராகிய பாதகர் கை
போட்டே பிடித்திடவும்,-பின்னும்-பொற்கரங் கட்டி இழுத்திடவும்.

 7. செம்புருவையைப் போலே-கூடச்-சென்றிடக் காய்பாமுன் நின்றிடவும்,
அம்பரனே, உந்தனுக்கு-இந்த-ஆபத்துவந்த தென் பாவம் அல்லோ?


ராகம்: உசேனி
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்:  வே. சாஸ்திரியார்