தேவதே ஓர் ஏக வஸ்து
பல்லவி
தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவ நாமனாம் கிறிஸ்து,
தேவன் ஆதியே நமா!
அனுபல்லவி
ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா, நமஸ்து-ஒரு-தேவதே
சரணங்கள்
1. மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா!-ஒரு - தேவதே
2. ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய்,
நீதி ஞாய நேர்மையாய், நீடூழி ஆள் சுயாதிபா!-ஒரு - தேவதே
3. மாசில்லா நேச வாச மட்டில்லா நன்மையே,
தேசுலா[1] வனாதி ஏசு மா சிறந்த உண்மையே!-ஒரு - தேவதே
4. ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி, ஏகமாம், ஆனந்தமே,
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே!-ஒரு - தேவதே
ராகம்: புன்னாகவராளி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] ஒளி பரந்த