250. தேவ சுதன் பூவுலகோர் பாவம்

தேவசுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க

அந்தாதி 

1. தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க-மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார்.

2. வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே-பர
மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார்.

3. தொண்டனாகி, அண்டர் கோமான்[1] விண்ட[2] மறையே,-பரி
சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே.

4. புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே-பல
போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார்.

5. பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள்-அற்
புதங்கள் செய்துசிதங்கள்[3] ஓதிக் கதங்களை[4] வென்றார்.

ராகம்: காம்போதி
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: தேவ வரம்

[1]. வானவர் அரசன்
[2]. உரைத்த
[3]. சிறந்தவை
[4]. பாம்புகளை