துதிதுதி பன்றனையே
பல்லவி
துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக.
சரணங்கள்
1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே,
கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. - துதி
2. இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு,
மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று. - துதி
3. சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
பவிசை யிழந்தகோலம் பார் இந்த நற்காலம். - துதி
4. இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக. - துதி
5. நேயன் யேசுவைத்தேடி நிதமவர் பதம் நாடித்
தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடித். - துதி
ராகம்: உசேனி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்